சிறையில் இருக்கும் 2 போலீஸ்காரர்கள் குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் கைது

" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் 2 வழக்கு களை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர். இந்த 2 வழக்கு களிலும் முறைகேடுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என். பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன் உள்ளிட்ட 50 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.


 


இந்த 2 வழக்குகள் தொடர்பாகவும் தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் போலீஸ்காரர்கள் சித்தாண்டி, முத்துக்குமார் மற்றும் விமல் குமார், சுதா தேவி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் 4 பேருக்கும், குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட தகவல், புழல் சிறையில் இருக்கும் அவர்கள் 4 பேருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.