கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில், வேலை செய்து வந்தவர் வேணுகோபால் (வயது 25). நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு வேணுகோபாலும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற தீனதயாளன் (30) இருவரும் மது குடித்து கொண்டு இருந்த போது தீனா, வேணுகோபாலை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500 மற்றும் 2 செல்போன்களை பறித்து கொண்டார்.



 


" alt="" aria-hidden="true" />

பின்னர் தீனா, வேணுகோபாலை கருங்கல்லால் தாக்கி கொலை செய்தார்.

இது குறித்து ஒரகடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தீனதயாளனை கைது செய்தனர். இந்த வழக்கு, காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு வக்கீலாக இளவரசு ஆஜரானார், வழக்கை காஞ்சீபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி கயல்விழி விசாரித்து, வேணுகோபாலை கொலை செய்த தீனாவுக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராதம் செலுத்த தவறினால், 6 மாதம் சிறை தண்டனையும், செல்போன், பணம் பறித்த வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், சிம் கார்டை எறித்த குற்றத்திற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.