ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் இரங்கல் செய்தி .
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான தி மு கவின் பொதுச்செயலாளருமான அன்பழகன் அவர்கள் உடல் நல குறைவால் அப்போலோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலை அவர் காலமானர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதணையும் அளிக்கிறது . பெரியாரின் கொள்கைகளின் பிடிப்புடனும் சமரசம் இன்றியும் தி மு கவின் கொள்கை சூரியனாக பிரகாசித்தவர். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பேராசிரியர் அன்பழகன் அவர்களை இழந்து வாடும் தி மு க வினருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார் .
" alt="" aria-hidden="true" />