பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது

 



மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் மேற்கொண்டு வரும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.  



ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுபடுத்தியது, தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. 


 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது போன்ற செயலி உள்பட தற்போதைய தொழில்நுட்பங்களை  உங்கள் அரசு சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.